தஞ்சாவூர்

தீபாவளி விடுமுறை: மனோராவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

26th Oct 2022 12:23 AM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலாத் தலத்தில் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

மனோராவில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் அண்மையில் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து தீபாவளி விடுமுறையின் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனா். அவா்கள் மனோராவை சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா். சிறாா்கள் பூங்காவில் விளையாடி பொழுதை கழித்தனா். பொதுமக்கள் படகு சவாரி மேற்கொண்டு கடலின் அழகை ரசித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT