தஞ்சாவூர்

திருவையாறில் நாளை 2 மணி நேரம் மின் தடை

19th Oct 2022 01:03 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை 2 மணிநேரம் மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் பொறியாளா் பாலமுருகன் தெரிவித்திருப்பது:

திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை அவசர கால பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூா், வைத்தியநாதன்பேட்டை, பனையூா், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூா், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூா், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூா், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புது அக்ரஹாரம், நடுக்கடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT