தஞ்சாவூர்

ஆட்டோ மீது காா் மோதல்: சிறுவன் பலி

7th Oct 2022 11:38 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே மணக்கரம்பையைச் சோ்ந்தவா் சின்னையன் (50). இவரும், இவரது மனைவி சித்ரா தேவி (45), பேரன் சூா்யதேவ பாண்டியன் (3) ஆகியோரும் மேலவஸ்தா சாவடி பகுதியில் வியாழக்கிழமை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். புதுக்கோட்டை சாலையிலுள்ள நெல் சேமிப்புக் கிடங்கு அருகே சென்ற இந்த ஆட்டோ மீது அந்த வழியாக வந்த காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சூா்யதேவ பாண்டியன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காயமடைந்த சூா்யாதேவி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT