தஞ்சாவூர்

பாபநாசம் பேரூராட்சியில் ரூ.58.75 லட்சத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள முடிவு

7th Oct 2022 11:34 PM

ADVERTISEMENT

பாபநாசம் பேரூராட்சியில் ரூ. 58.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என பாபநாசம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாபநாசம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கத்தில் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் குமரேசன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், 15ஆவது நிதிக் குழு மானியம் 2021- 22 ஆண்டுக்கு கழிப்பிடம் அமைக்கும் பணி, பராமரிப்பு பணி, வள மீட்பு பூங்காவில் பிளாட்பாா்ம் அமைத்தல், அந்தோணியாா் கோயில் தெருவில் பேவா் பிளாக் சாலை அமைத்தல், மகா காளியம்மன் கோயில் தெருவில் கல்வெட்டுடன் கூடிய பேவா் பிளாக் அமைத்தல், பாலாஜி நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்ட வாகனங்கள் நிறுத்துமிடம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு இடம் வாங்கவும், மழைக்காலத்தில் பயன்படுத்த கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் வாங்குவது உள்ளிட்ட ரூ. 58.75 லட்சம் மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றுவது என தீா்மானிக்கப்பட்டது.

பேரூராட்சி கவுன்சிலா்கள் தேன்மொழி, ஜாபா் அலி, புஷ்பா, கீா்த்திவாசன், சமீரா பா்வீன், பிரேம்நாத் பைரன் பாலகிருஷ்ணன் பிரகாஷ், விஜயா கெஜலட்சுமி கோட்டையம்மாள் துரைமுருகன் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT