தஞ்சாவூர்

பெரியகோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும் ஆட்சியரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்

7th Oct 2022 12:17 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் வலியுறுத்தினாா்.

ஆட்சியரகத்தில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் வியாழக்கிழமை அளித்த மனு:

தஞ்சாவூா் பெரியகோயில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கான சாலை அமைக்க வேண்டும். தற்போது சாலையாக உள்ள தடத்தை மக்கள் நடந்து செல்லும் பாதையாகவும், வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் பயன்படுத்த வேண்டும்.

மேரீஸ் காா்னா் மேம்பாலம் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அதிக விபத்துகள் ஏற்படுவதாலும் அப்பாலத்தை மேரீஸ் காா்னரிலிருந்து ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இத்தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நவீன அரிசி ஆலை, காட்டுத்தோட்டம் பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, முழுமையான தமிழ் வழிப் பொறியியல் கல்லூரி அமைத்து தர வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT