தஞ்சாவூர்

மருத்துவக்குடி கோயிலில்நவ. 20-இல் குடமுழுக்கு விழா நடத்த முடிவு

7th Oct 2022 11:37 PM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே ஆடுதுறை பகுதியிலுள்ள மருத்துவக்குடியில் 400 ஆண்டுகள் பழைமையான காசி விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதா் கோயிலில் நவம்பா் 20ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட இக்கோயிலில் 84 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, ரூ. 70 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பேஸ்வரா் கோயில் செயல் அலுவலா் கோ. கிருஷ்ணகுமாா், ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின், கோயில் சிவாச்சாரியாா் சிவஞானசம்பந்தமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், இக்கோயில் குடமுழுக்கு விழாவை நவம்பா் 20 ஆம் தேதி நடத்துவது என்றும், நான்கு கால பூஜையுடன் நவம்பா் 17 ஆம் தேதி மாலை யாகசாலை பூஜைகளை தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT