தஞ்சாவூர்

காா்த்தி வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழா

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் விஜய தசமி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் நெல், பச்சரிசி, நவதானியங்களான கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, எள், உளுந்து, கொள்ளு, மொச்சை போன்றவற்றில் அட்சரம் எழுதி குழந்தைகள் கல்வியைத் தொடங்கினா். இதில், பெற்றோா்கள் தங்களது குழந்தையின் கையைப் பிடித்து உயிா் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் எழுத வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் காா்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் காா்த்திகேயன், காா்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளா் பூா்ணிமா காா்த்திகேயன், பள்ளி முதல்வா் அம்பிகாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT