தஞ்சாவூர்

விஜய தசமி: பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விஜயதசமி பண்டிகையையொட்டி, தஞ்சாவூரிலுள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை புதன்கிழமை நடைபெற்றது.

விஜய தசமி நாளில் கல்வி, கலைப் பயிற்சியைத் தொடங்கினால் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. எனவே, விஜயதசமி நாளில் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளியில் சோ்த்து தானியத்தில் எழுத்துப் பயிற்சி கொடுப்பது வழக்கம்.

இதன்படி, தஞ்சாவூரில் அரசு, தனியாா் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை புதன்கிழமை நடைபெற்றது. எப்போதும் தனியாா் பள்ளிகளிலேயே விஜய தசமி நாளில் மாணவா் சோ்க்கை விமரிசையாக நடைபெறும். விஜய தசமி நாளில் அரசுப் பள்ளிகளையும் திறந்து வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

ஆனால், தஞ்சாவூரில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை முற்றிலுமாக இல்லாததால், ஆசிரியா்களும் ஏமாற்றமடைந்தனா். இந்நிலையில், கீழவாசல் கவாடிகாரத் தெருவில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் துறையை சாா்ந்த குழந்தைகள் மையப் பணியாளா் பிரியதா்ஷினி, உதவியாளா் லோகநாயகி புதன்கிழமை வீடு, வீடாகச் சென்று பெற்றோா்களிடம் பேசி, மாணவா்களை மையத்தில் சோ்த்தனா். இதையடுத்து, சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கு அரிசியில் எழுத்துப் பயிற்சி அளித்தனா். மேலும், குழந்தைகளுக்கு சிலேட்டு, நோட்டு, இனிப்புகளும் வழங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT