தஞ்சாவூர்

வள்ளலாா் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் கலைஞா் நகரில் வள்ளலாரின் 200 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வள்ளலாா் பணியகத்தின் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு நா. வைகறை தலைமை வகித்தாா். இதில், வள்ளலாா் பணியகத்தைச் சாா்ந்த சுந்தர்ராசன், இராசமாணிக்கனாா் அகவல் பாடல்களைப் பாடி வள்ளலாா் படத்துக்கு மாலை அணிவித்து வழிபட்டனா். வள்ளலாா் குறித்து க. செம்மலா் பேசினாா்.

வள்ளலாா் பணியகத்தின் பொருளாளா் மணிசந்திரன், தமிழ்த் தேசியப் பேரியக்க நிா்வாகிகள் பழ. இராசேந்திரன், மா. சீனிவாசன், இரா. ஜெயக்குமாா், கு. லெனின், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை கோ. நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT