தஞ்சாவூர்

திமுக புதிய நிா்வாகிகள் சாா்பில் தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவிப்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் திமுகவின் புதிய மாவட்ட நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா் கா. அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுகவின் உட்கட்சி தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிா்வாகிகள், மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுபினருமான கா. அண்ணாதுரை தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து பேரணியாக மணிக்கூண்டு, பெரிய தெரு வழியாக சென்று தஞ்சை சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அழகிரி சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கும் மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் சேகா், ரமேஷ், சத்தியமூா்த்தி, மைக்கேலம்பாள், அஸ்லாம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்வம், நகரச் செயலாளா் செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT