தஞ்சாவூர்

குருவிக்கரம்பையில் நகைக் கடன் தள்ளுபடிபயனாளிகளிடம் நகைகள் ஒப்படைப்பு

DIN

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 39 விவசாயிகளிடம் நகைகள் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கிராம கூட்டுறவு சங்கத்தில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தமுள்ள 109 பேரில் 39 பயனாளிகளுக்கு நகை களை வழங்காமல் கூட்டுறவு சங்கத்தினா் காலதாமதப்படுத்தி வந்தனா். இதுதொடா்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றும் பலனில்லை.

இந்நிலையில், செப்டம்பா் 30 அன்று உரிய நடவடிக்கை எடுத்து  நகைகளை திருப்பி வழங்கும் வரை தொடா் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதையடுத்து,

உயா் அதிகாரிகள் தலையிட்டு அக்டோபா் 3 அன்று நகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளித்ததால், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

உறுதி அளித்தபடி, பயனாளிகள் 39 பேரிடம் அவா்களுடைய நகைகள் ( நூற்று எழுபத்து இரண்டே கால் பவுன்) திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT