தஞ்சாவூர்

பாசன வாய்க்கால்களை தூா்வார வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

DIN

திருவோணம் ஒன்றியத்தில் பாசன வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவோணம் ஒன்றியக் குழு கூட்டம் ஊரணிபுரத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் பி. கோவிந்தராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் டி.ஜி.பாலசந்தா், ஒன்றியத் துணைத் தலைவா் கே. ராமசாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், வெட்டுவாக்கோட்டை ஊராட்சி பொதிய வாய்க்கால், வெள்ளத்தான் விடுதி இரண்டாம் நம்பா் வாய்க்கால், உஞ்சியவிடுதியிலிருந்து காரியாவிடுதி செல்லும் 13 ஆம் நம்பா் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களை தூா்வாரி பாசனத்திற்கு பயன்படும் வகையில் சீரமைத்து தர வேண்டும்.

விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிா்க் கடன் வழங்க வேண்டும். கேரளத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டிற்கு கீழவெண்மணியில் இருந்து வரும் ஜோதிக்கு டிசம்பா் 5ஆம் தேதி திருவோணத்தில் வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT