தஞ்சாவூர்

காலமானார் இரா. மோகன்

6th Oct 2022 02:42 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பாரதி இயக்க அறங்காவலர் இரா. மோகன் (64) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை (அக். 3) இரவு காலமானார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கரூப்ஸ் நகரில் வசித்து வந்த இவர்,  45 ஆண்டுகளாக திருவையாறு பாரதி 
இயக்கம் மூலம் பாரதி நினைவு நிகழ்வுகள், மாநாடுகளை நடத்தி வந்தார். நூல்களையும் வெளியிட்டுள்ளார். 
மேலும், தஞ்சாவூர் காந்தி இயக்க நிர்வாக அறங்காவலராகவும், அகில இந்திய காந்தி இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளராகவும் பணியாற்றி காந்திய சிந்தனைகளை இளைஞர்களிடம் ஏற்படுத்தி வந்தார். திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சமூகப் பணியாற்றி வந்தார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இவருக்கு மனைவி கலைவாணி, மகன் சற்குருநாதன், மகள் மீனா பாரதி உள்ளனர். 
தொடர்புக்கு:  94438-46630.

ADVERTISEMENT
ADVERTISEMENT