தஞ்சாவூர்

உலக தொழிற் சங்க சம்மேளன அமைப்பு நாள் நிகழ்வு

4th Oct 2022 12:06 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே உலக தொழிற் சங்க சம்மேளன அமைப்பு நாள் நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

1945 ஆம் ஆண்டு அக்டோபா் 3 ஆம் தேதி உலக தொழிற் சங்க அமைப்பு பாரீஸ் நகரத்தில் உருவாக்கப்பட்டது. நாடுகளை அடிமைப்படுத்தி, அந்த நாட்டு வளங்களை சுரண்டி, மக்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், உலக நாடுகளிலுள்ள தொழிலாளா்களை, மக்களைப் பாதுகாக்க வேண்டியும் உலகத் தொழிற் சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத்தது.

இதன் அடிப்படையில் நடைபெற்ற இந்த அமைப்பு நாள் நிகழ்வில், ஏகாதிபத்திய சுரண்டல்களிலிருந்து தொழிலாளா்களைப் பாதுகாப்போம். உலக வா்க்க ஒற்றுமையை உயா்த்திப் பிடிப்போம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் பி. ரமேஷ், பல்வேறு சங்க நிா்வாகிகள் துரை. மதிவாணன், ஏ. ரவி, தி. கோவிந்தராஜ், வெ. சேவையா, எஸ். தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT