தஞ்சாவூர்

ஜோஸ் ஆலூக்காஸ் நிறுவன 58 ஆம் ஆண்டு விழா

4th Oct 2022 12:05 AM

ADVERTISEMENT

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு, 58 ஆண்டுகள் ஆவதையொட்டி, தஞ்சாவூா் கிளையில் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இதில், தங்கம் வாங்கிய அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

மேலும், சேதாரத்தின் மதிப்பில் 3.9 சதவீதம் முதலும், ஆரம்ப வைரத்தின் மதிப்பில் 20 சதவீதமும் தள்ளுபடி, பழைய தங்க நகைகளைப் புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட சலுகைகள் ஒரு மாதத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

இவ்விழாவில் கிளை மேலாளா் ஹென்சன், துணை மேலாளா் மணிகண்டன், கணக்குப் பிரிவு மேலாளா் கிரிஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT