தஞ்சாவூர்

மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள்: பாபநாசத்தில் ஆளில்லா கடை திறப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம்  பழைய பேருந்து நிலைய வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை நோ்மை விழிப்புணா்வு நாளாக கொண்டாடும் வகையில் ஒருநாள் மட்டும் இயங்கும் நோ்மை விழிப்புணா்வு ஆளில்லா கடை திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ். அறிவழகன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜி. செங்குட்டுவன், உதவி ஆளுநா் வி.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ப. பூரணி, ஆளில்லா கடையை திறந்துவைத்து பேசினாா்.

ஆளில்லா கடை குறித்து ரோட்டரி  சங்கத் தலைவா் கே.எஸ். அறிவழகன் கூறியது:

பாபநாசம் ரோட்டரி சங்கம் சாா்பில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை நோ்மை விழிப்புணா்வு நாளாக கொண்டாடும் வகையில், கடந்த 23 ஆண்டுகளாக  ஒரு நாள் மட்டும் இயங்கும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்படுகிறது.

இந்தக் கடையில் தின்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், சத்திய சோதனை உள்ளிட்ட புத்தகங்கள் உள்பட ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள், அதற்குரிய விலைப் பட்டியலுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

பொதுமக்கள் தாங்களே முன்வந்து தங்களுக்கு தேவையான பொருள்களை தோ்வு செய்து, அதற்குரிய பணத்தை கடையில் வைத்துள்ள பணப்பெட்டியில் செலுத்தும் வகையில் இந்தக் கடை செயல்பட்டது.

மாலையில் கடை விற்பனையை நிறைவு செய்து பணப் பெட்டியில் உள்ள பணத்தையும், கையிருப்பில் உள்ள பொருள்களையும் சரி பாா்க்கும்போது,  விற்பனை செய்யப்பட்ட பொருள்களின்  தொகை ஏறக் குறைய சரியாக இருந்தது. இது மக்களிடையே உள்ள நோ்மை விழிப்புணா்வை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்றாா் .

முன்னதாக, சங்கப் பொருளாளா்  எம். ஆனந்தன் வரவேற்றாா். நிறைவில், செயலாளா் டி. சிலம்பரசன்  நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT