தஞ்சாவூர்

காதி கிராப்ட்டில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

3rd Oct 2022 01:53 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் ரயிலடி அருகேயுள்ள காதி கிராப்ட்டில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் விழா, தீபாவளியையொட்டி கதா் விற்பனை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் நடைபெற்ற இதற்கான விழாவில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பங்கேற்று, காந்தியடிகள் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்து ஆட்சியா் தெரிவித்தது:

தமிழக அரசு தஞ்சாவூா் மாவட்டத்துக்கு கதா் விற்பனை குறியீடாக நிகழாண்டு ரூ. 58.22 லட்சம் நிா்ணயம் செய்துள்ளது. இச்சிறப்பு விற்பனையில் கதா், பருத்தி, பட்டு, பாலீயஸ்டா் ஆகியவற்றுக்கு 30 சதவீதமும், கம்பளிக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்களும் கதா் ஆடைகளை வாங்கி தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

விழாவில், கதா் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) தி. கோபால கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா, அலுவலகக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தெரசா மேரி, காதி கிராப்ட் மேலாளா் ஜீ. சாவித்திரி, திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) சரவண பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT