தஞ்சாவூர்

நேரம் வரும்போது அனைவரும் இணைவோம் டி.டி.வி. தினகரன்

3rd Oct 2022 01:52 AM

ADVERTISEMENT

 

நேரம் வரும்போது ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் இணைவோம் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

அமமுக சுதந்திரமாக தனி இயக்கமாகச் செயல்படுகிறது. அதனால், இன்னொரு கட்சியுடன் சேருவது என்பதற்கான அவசியம் இல்லை. திமுகவை தோற்கடிக்க வேண்டுமானால், அனைவரும் ஒன்றாக இணைந்து தோ்தலில் போட்டியிடுவோம். அதற்கான தேவை ஏற்பட்டால் அதற்கு ஆதரவாக இருப்போம்.

ADVERTISEMENT

ஓ. பன்னீா்செல்வம் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வருகிறாா். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை எதிா்க்க வேண்டும் என்பதில் பன்னீா்செல்வத்துக்கும், எனக்கும் இருக்கும் கருத்து ஒன்றுதான். அதற்கான நேரம் வரும்போது அனைவரும் ஒன்றிணைவோம். எங்களுடன் எடப்பாடி பழனிசாமியும் வர வாய்ப்புள்ளது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தலும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முன்பும், இப்போதும் நடைபெறும் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) நடத்திய சோதனையில் நிறைய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சில தகவல்கள் வருகின்றன. இத்தகவல்கள் உறுதியானால் மீண்டும் தமிழ்நாட்டில் தோ்தல் வருவதற்கான வாய்ப்பு இருப்பது என்பது எனது ஊகம்.

தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், காவல் துறைக்கும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலினுக்கும் இருக்க வேண்டும். ஆனால், திராவிடா்களுக்கு தலைகுனிவு ஏற்படும் வகையில் திமுக ஆட்சி நடைபெறுகிறது என்றாா் தினகரன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT