தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா

3rd Oct 2022 01:52 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தமுஎகச - தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலா் களப்பிரன், மாவட்டச் செயலா் ஆா். விஜயகுமாா், மாவட்டத் துணைச் செயலா் ப. சத்யநாதன், மாநகரச் செயலா் ஸ்ரீதா், மாநகரத் தலைவா் பிம்பம் சாகுல், மாவட்டக் குழு உறுப்பினா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதேபோல, தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகே மகாத்மா காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கோ. நீலமேகம், என். சிவகுரு, மாவட்டக் குழு உறுப்பினா் என். சரவணன், மாநகரச் செயலா் எம். வடிவேலன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளா் ஆா். புண்ணியமூா்த்தி, மாவட்ட நிா்வாகி வெ. ஜீவகுமாா், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட அமைப்பாளா் பி. செந்தில்குமாா், மாநகர ஒருங்கிணைப்பாளா் அப்துல் நசீா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுல்ஆப்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

மேலும், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், துணைத் தலைவா் லட்சுமி நாராயணன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ஏ. ஜேம்ஸ், அமைப்புசாரா தொழிலாளா் காங்கிரஸ் நிா்வாகி சந்திரசேகரன், மக்கள் நலப் பேரவை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், ரயிலடியில் லால்பகதூா் சாஸ்த்ரி பிறந்த நாள் விழாவும், கீழவாசலில் காமராஜா் நினைவு நாள் நிகழ்வும் நடைபெற்றன.

தஞ்சாவூா் வடக்கு வீதியிலுள்ள காந்தி சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அதன் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT