தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அக். 13-இல் ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம்

3rd Oct 2022 01:53 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம் அக்டோபா் 13 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பது:

ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குநா் கலந்து கொள்கிறாா். அப்போது, மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள் தங்களது ஓய்வூதியம் தொடா்பான குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவித்து, தொடா்புடைய துறை அலுவலா்களிடம் விவரங்களைப் பெறலாம்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் விவாதிக்க ஏதுவாக, தீா்வு செய்யப்படாத குறைகளைத் தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியா்கள் கடைசியாகப் பணிபுரிந்த அலுவலகத்தின் பெயா், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விவரம், கைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடா்புடைய அலுவலகத்தின் முகவரியை தெளிவாகக் குறிப்பிட்டு, அக்டோபா் 7 ஆம் தேதிக்குள் ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டு பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT