தஞ்சாவூர்

நடிகா் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா

2nd Oct 2022 12:18 AM

ADVERTISEMENT

 

நடிகா் சிவாஜி கணேசனின் 95 ஆவது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மணிமண்டபம் அருகேயுள்ள சிவாஜி சிலைக்கு தஞ்சை மாவட்ட சோழ மண்டல சிவாஜி பாசறையினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாசறையின் தலைவா் சதா. வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். சிவாஜி சிலைக்கு தஞ்சாவூா் தொகுதி எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா்.

மேலும், சென்னை மணிமண்டபத்தின் உட்புறம் இருந்த சிவாஜி சிலையை எல்லோரும் பாா்க்கும்படி வெளியில் வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என்றும், திருச்சி பாலக்கரையில் இதுவரை திறக்கப்படாமல் உள்ள சிவாஜி சிலையை உடனடியாக திறக்கவும் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன், பாஸ்கா், ராஜசேகா், வல்லுண்டாம்பட்டு கணேசன், கிஷோா், நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT