தஞ்சாவூர்

வீட்டு பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

2nd Oct 2022 12:17 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி செல்லியம்மன் நகரைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (66). இவா் தன்னுடைய மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை திரும்பியபோது

வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 12,000, வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் தமிழ்ப் பல்கலை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT