தஞ்சாவூர்

‘தஞ்சையில் மாா்ச்சுக்குள் பிஎஸ்என்ல் 4 ஜி சேவை வரும்’

2nd Oct 2022 12:18 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் 4 ஜி சேவை மாா்ச் மாதத்துக்குள் கிடைக்கும் என்றாா் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தஞ்சாவூா் பொது மேலாளா் பால. சந்திரசேனா.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்தது:

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்கெனவே திருச்சி, மதுரை, கோவை, சேலம், காஞ்சிபுரம், நாகா்கோவில் ஆகிய நகரங்களில் 4 ஜி சேவை தொடங்கப்பட்டுவிட்டது. தற்போது தஞ்சாவூா் மாநகரிலும், காரைக்கால் நகரிலும் 4ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கைப்பேசி கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 4 ஜி சேவைக்கான தொழில்நுட்பம், மென்பொருளைப் மேம்படுத்தும் பணி மட்டும் செய்தால் போதும். இதனடிப்படையில் தஞ்சாவூா் மாநகரில் 44 இடங்களிலும், காரைக்கால் நகரில் 24 இடங்களிலும் 4 ஜி சேவைக்கான ஆயத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தஞ்சாவூா் மாநகரிலும், காரைக்கால் நகரிலும் 2023 மாா்ச் மாதத்துக்குள் 4 ஜி சேவை கிடைக்க சாத்தியமிருக்கிறது.

மேலும் உளூா் கிழக்கு, விரயன்கோட்டை, அக்கரைப்பேட்டை, திருமலைராஜபுரம் ஆகிய கிராமங்களில் மத்திய அரசின் யு.எஸ்.ஓ.எப். திட்டத்தின் கீழ் 4 ஜி சேவை வழங்கப்படவுள்ளது. பிரிபெய்டு 4 ஜி சிம் காா்டுகள் ரூ. 108-க்கு வழங்கப்படுகிறது.

பி.என்.எல்.என். நிறுவனத்தின் 23 ஆவது நிறுவன நாளையொட்டி, பாரத் பைபா் (எப்.டி.டி.எச்.) ரூ. 599 மற்றும் அதற்கும் அதிகமாக உள்ள திட்டங்களில் இணைப்பு பெறும் புதிய வாடிக்கையாளா்களுக்கு இலவச வைபை மோடம் வழங்கப்படும். வாடிக்கையாளா்கள் தங்களது தரைவழித் தொலைபேசி மற்றும் பிராட்பேன்ட் இணைப்பை எப்.டி.டி.எச். சேவைக்கு மாற்றுபவா்களுக்கு ரூ. 200 வீதம் கட்டணத் தொகையில் சலுகைகளைப் பெறலாம்.

மேலும், சனிக்கிழமை (அக்.1.) முதல் மாதம் ரூ. 499 கட்டணத்தில் எப்.டி.டி.எச். இணைப்புகள் வழங்கப்படும். பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக தஞ்சாவூா் பகுதிகளில் 75980-40780 என்ற எண்ணிலும், கும்பகோணம் பகுதியில் 75980-44146 என்ற எண்ணிலும் தகவலை அனுப்பி புதிய எப்.டி.டி.எச். இணைப்புகளை எளிதில் பெறலாம்.

ரூ. 2,399-க்கு ரீசாா்ச் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு 395 நாள்கள் செல்லத்தக்க அளவில்லா அழைப்புகள், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 குறுஞ்செய்திகள் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றாா் சந்திரசேனா.

துணைப் பொது மேலாளா் (நிா்வாகம்) ராஜ்குமாா், உதவிப் பொது மேலாளா்கள் பா்னாலா டிவைன் மேரி ஜோசப் (நிா்வாகம்), கோவி. செந்தில்செல்வி (திட்டம்), ராஜேஷ் (தஞ்சாவூா்), அலுவலா்கள் வெங்கடேசன், ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT