தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை:அக்குபஞ்சா் மருத்துவா் கைது

2nd Oct 2022 12:18 AM

ADVERTISEMENT

 

 தஞ்சாவூரில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்குபஞ்சா் மருத்துவரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் கீழவாசல் ராவுத்தாபாளையத்தைச் சோ்ந்தவா் எஸ். பாலமுருகன் (43). திருமணமான இவா் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியைச் சோ்ந்த விதவைப் பெண்ணுடன் வாழ்ந்து வந்தாா். இதனிடையே, கடந்த ஜனவரி மாதத்தில் விதவைப் பெண்ணின் மனநலன் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய மகளுக்கு பாலமுருகன் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலமுருகனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT