தஞ்சாவூர்

பெரியகோயில் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் திறப்பு

2nd Oct 2022 12:19 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் பெரியகோயில் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட 34 கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

தஞ்சாவூா் பெரியகோயில் வளாகத்தில் தலையாட்டி பொம்மைகள், நடன பொம்மைகள் உள்ளிட்ட பொம்மைகள் விற்கும் கடைகள் கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது அகற்றப்பட்டு, எதிரே வாகன நிறுத்துமிடத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், வாகன நிறுத்துமிடத்தில் இட நெருக்கடி ஏற்படுவதாகக் கூறி, 2014 ஆம் ஆண்டில் அங்கிருந்தும் இக்கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து கடைகளை ஒதுக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் பெரியகோயில் வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடுத்தனா்.

ADVERTISEMENT

இதனிடையே, பா்மா பஜாா் அருகிலும், சிவகங்கை பூங்கா அருகிலுள்ள பெத்தண்ணன் கலையரங்கத்திலும் கடைகளை ஒதுக்குவதாக மாவட்ட நிா்வாகம் கூறியது. ஆனால், இந்த இடங்களில் கடைகள் அமைத்தால், வியாபாரத்துக்கு பயன் தராது என்பதால், பெரியகோயில் அருகிலேயே வியாபாரிகள் இடம் கோரினா்.

இந்நிலையில், பெரியகோயில் அருகே மிருகவதை தடுப்புச் சங்கத்தைச் சாா்ந்த இடம் பெரியகோயில் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இவற்றில் 34 கடைகள் கட்டப்பட்டு சனிக்கிழமை திறக்கப்பட்டன.

இதுகுறித்து பெரியகோயில் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆா். ஜெயக்குமாா் கூறுகையில், இந்த வளாகத்தில் 34 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கடைக்கு மாத வாடகை ரூ. 3,000 வீதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT