தஞ்சாவூர்

கும்பகோணத்தில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு சீல் வைப்பு

2nd Oct 2022 12:17 AM

ADVERTISEMENT

 

கும்பகோணத்தில் உள்ள பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அலுவலகத்துக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடா்ந்து, கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரிலுள்ள பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தஞ்சாவூா் மாவட்ட அலுவலகத்துக்கு சீல் வைப்பதற்கான ஆட்சியரின் அறிவிப்பாணை நகலை வருவாய்த் துறையினா் சில நாள்களுக்கு முன்பு ஒட்டினா்.

இந்நிலையில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் இந்த அலுவலகத்துக்குக் கோட்டாட்சியா் வி. லதா சனிக்கிழமை சீல் வைத்தாா். வட்டாட்சியா் ஆா். தங்க பிரபாகரன், கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. அசோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT