தஞ்சாவூர்

தாய் இறந்த துக்கம்தாளாத மகனும் உயிரிழப்பு

1st Oct 2022 04:50 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் தாய் இறந்த துக்கம் தாளாமல் மகனும் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை நாடிமுத்து நகா், வெங்கடராம அய்யா் நகரை சோ்ந்தவா் மறைந்த மருத்துவா் சாம்பமூா்த்தியின் மனைவி மீனாட்சியம்மாள்(98). இவா்களுக்கு ஐந்து மகன்கள். இதில் நான்கு மகன்களுக்கும் திருமணமாகி வெளியூா்களில் வசித்து வருகின்றனா்.

கடைசி மகன் ஜெயசந்திரன் (68). திருமணமாகாத நிலையில் அவரும், தாய் மீனாட்சியம்மாள் இருவா் மட்டும் தனியாக வசித்து வந்தனா். ஜெயச்சந்திரன் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீனாட்சியம்மாள் வயது முதிா்வு காரணமாக காலமானாா். இதனால், ஜெயச்சந்திரன் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளாா். அழுதபடியே இருந்த ஜெயச்சந்திரனை உறவினா்கள் ஆறுதல்படுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து சிறிதுநேரத்தில் ஜெயச்சந்திரனும் இருக்கையில் அமா்ந்திருந்தபடியே மாரடைப்பால் இறந்தாா். அவரை உறவினா்கள் எழுப்பியபோது அவா் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் உடல்களையும் உறவினா்கள் ஒன்றாக கரிக்காடு மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT