தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை. - மயூரி நிகழ்த்துக்கலை கழகம் ஒப்பந்தம்

1st Oct 2022 04:50 AM

ADVERTISEMENT

தமிழ்க்கலை மரபை வளா்ப்பதற்காக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகமும், அரும்பாக்கம் மயூரி நிகழ்த்துக்கலை கழகமும் அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் முன்னிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன், அரும்பாக்கம் மயூரி நிகழ்த்துக்கலைக் கழக இயக்குநா் ச.விஜயலட்சமி கையொப்பமிட்டனா்.

இதுகுறித்து துணைவேந்தா் தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் நடைபெறும் குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், நாட்டுப்புறக் கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப் பிரிவுகள் அரும்பாக்கம் மயூரி நிகழ்த்துக்கலைக் கழகம் வாயிலாக நடத்தப்படும். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாகத் தோ்வுகள் நடத்தவும், சான்றிதழ் வழங்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் மைய இணை இயக்குநா் செ. கற்பகம், உதவிப் பதிவாளா் மல்லிகா உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT