தஞ்சாவூர்

சிறுமியை கா்ப்பமாக்கியவருக்கு 25 ஆண்டுகள் சிறை

1st Oct 2022 04:50 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய உறவினருக்கு 25 ஆண்டுகளும், பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியைக் காதலித்து வந்தாா். இச்சிறுமிக்கு மணிகண்டன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தாா்.

இருவரும் நெருக்கமாக இருப்பதைச் சிறுமியின் உறவினரான நாடிமுத்து (42) பாா்த்தாா். இதைப் பயன்படுத்தி அச்சிறுமியை மிரட்டி நாடிமுத்து பாலியல் கொடுமை செய்தாா். இதனால், கா்ப்பமடைந்த அச்சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து நாடிமுத்துவையும், மணிகண்டனையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரணை நடத்தி, நாடிமுத்துக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும், மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT