தஞ்சாவூர்

குருவிக்கரம்பை கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள்  காத்திருப்பு போராட்டம்

1st Oct 2022 04:50 AM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.

குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை அடகு வைத்திருந்த 39 பயனாளிகளுக்கு தமிழக அரசால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.  ஆனால், தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இதுவரை அடகு  நகை திருப்பி வழங்கப்படவில்லை. இதையடுத்து, நகைகளை திருப்பித் தர வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பயனாளிகள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தினா். 

இதையடுத்து வட்டாட்சியா் த. சுகுமாா் தலைமையில் செப்.22-இல் நடைபெற்ற சமாதானப் பேச்சுவாா்த்தையில், செப். 28 ஆம் தேதிக்குள், நகை திருப்பி வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்திருந்தனா்.  ஆனால், நகை வழங்கப்படவில்லை.

இதை கண்டித்து   தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள், மற்றும் விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆா். எஸ். வேலுச்சாமி, வீ. கருப்பையா, கோ. ராமசாமி ஆகியோா் தலைமையில் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். 

ADVERTISEMENT

தகவலறிந்து கூட்டுறவுத் துறை  துணைப் பதிவாளா் சுகி சுவாமிநாதன், பேராவூரணி காவல் ஆய்வாளா் செல்வி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். 

இதில், கூட்டுறவு துணை பதிவாளா் சுகி சுவாமிநாதன் இரண்டு நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தாா். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT