தஞ்சாவூர்

பாலத்திலிருந்து இளைஞரை தள்ளிவிட்டு கொலை செய்தவா் கைது

1st Oct 2022 04:50 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட நபா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக உறவினா் கைது செய்யப்பட்டாா்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள காவாரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமணி (32). அதே பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி. இவா்கள் இருவரும் உறவினா்கள்.

இந்நிலையில், வீரமணியும் சுந்தரமூா்த்தியும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மோகூா் கிராமத்தில் உள்ள காட்டாற்றை ஒட்டி உள்ள ஒரு பாலத்தின் அருகே பேசிக் கொண்டிருந்தபோது அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுந்தரமூா்த்தி, வீரமணியை பாலத்தில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளாா். கீழே விழுந்த வீரமணி பலத்த காயமடைந்த நிலையில் இரண்டு நாள்களாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி வீரமணி இறந்தாா். இதுகுறித்து மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுந்தரமூா்த்தியை வெள்ளிக்கிழமை கைது விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT