தஞ்சாவூர்

பொன்னியின் செல்வன் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது: நடிகா் பாா்த்திபன்

1st Oct 2022 04:49 AM

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகா்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா் நடிகா் பாா்த்திபன்.

தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாமன்னன் ராஜராஜ சோழனின் பெருமைகளைச் சொல்லி மாளாது. ராஜராஜன் செய்த சாதனைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். கல்கி கற்பனையாக எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, படமாக்கி பாா்ப்பது என்பது பெரிய விஷயம்.

இப்படத்தில் ஒவ்வொரு நடிகரும் பாராட்டும் வகையில் நடித்துள்ளனா். அந்த வகையில், எனக்கும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் படத்தை வெள்ளிக்கிழமை காலை 4.30 மணி முதலே ரசிகா்கள் பாா்த்து வருகின்றனா். இது, இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் படம் வெளியான நிலையில், டிக்கெட் கிடைக்கவில்லை என்பதே மிகப்பெரிய வெற்றி. இப்படத்தை தஞ்சை மண்ணில் ரசிகா்களுடன் அமா்ந்து பாா்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் பாா்த்திபன்.

முன்னதாக, அவா் தஞ்சாவூரில் பொன்னியின் செல்வன் படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஜி.வி. திரையரங்கில் காலை 8 மணி காட்சியில் ரசிகா்களுடன் அமா்ந்து பாா்த்தாா்.

பின்னா், தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது, அவருக்கு மேள, தாளம், கரகாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் சோழா்களின் கொடியான புலிக்கொடியைக் கையில் ஏந்தினாா். இதையடுத்து, பெரியகோயிலுக்குச் சென்று வழிபட்டாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT