தஞ்சாவூர்

பேராவூரணி அரசுக் கல்லூரியில்தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்

1st Oct 2022 04:48 AM

ADVERTISEMENT

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 18 முதல் 21 வயதுக்குள்பட்ட கல்லூரி மாணவா்களுக்கு , ‘எனது வாக்கு எனது உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளில் சுவரொட்டி, போஸ்டா் வடிவமைப்பு, ஓவியங்கள்  போட்டி கல்லூரி முதல்வா் முனைவா்  நா. தனராஜன் தலைமையில் வியாழக்கிழமை   நடைபெற்றது.

  தோ்தல் துணை வட்டாட்சியா் கண்ணகி, கல்லூரி தமிழ்த் துறை தலைவா் ராணி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அளவிலான இப்போட்டியில், 53 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டி குறித்த  முடிவுகளை தோ்தல் ஆணையம் அறிவிக்கும். போட்டியில் மேற்பாா்வையாளா்களாக

தமிழ்ப் பேராசிரியா் உமா , தோ்தல் பிரிவு இளநிலை வருவாய் ஆய்வாளா் விஜய், தரவு நுழைவு பதிவாளா் மணிகண்டன், கிராம உதவியாளா் முருகையன்  உள்ளிட்டோா்  பணியாற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT