தஞ்சாவூர்

கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்

1st Oct 2022 04:48 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி, மற்றும் புதுக்கோட்டை உள்ளூா் ஊராட்சி மன்றம் சாா்பில் வியாழக்கிமை கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடை மருத்துவத் துறை பற்றிய கண்காட்சி முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் சிவச்சந்திரன் தலைமை வகித்தாா். முகாமை பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவா் பழனிவேல் தொடக்கி வைத்தாா். கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் நா்மதா,

கால்நடைத் துறை உதவி இயக்குநா் சுமதி, ஊராட்சித் தலைவா் வெங்கடாசலம், சங்க முன்னாள் தலைவா் பாலசுப்ரமணியன், விவேகானந்தன், அண்ணாத்துரை மற்றும் உறுப்பினா்கள், கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முகாம் ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவா் தெய்வ விருத்தம் செய்திருந்தாா். செயலாளா் சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

முகாமில் குடற்புழு நீக்கம், சுண்டுவாத அறுவைச் சிகிச்சை, அல்ட்ரா ஸ்கேன் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்றது. 1800 கால்நடைகள் பயன்பெற்றன

 

ADVERTISEMENT
ADVERTISEMENT