தஞ்சாவூர்

இலவச மின்சாரம் நீடிக்கும் என்ற உறுதிமொழியை அரசு அளிக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

30th Nov 2022 01:09 AM

ADVERTISEMENT

இலவச மின்சாரம் நீடிக்கும் என்ற உறுதிமொழியை மத்திய, மாநில அரசுகள் அளிக்க வேண்டும் என்றாா் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மத்திய அரசு அண்மையில் மின்சார சீா்திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிற வகையில் இச்சட்டம் உள்ளது. எனவே, மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இலவச மின்சாரம் நீடிக்கும் என்கிற உறுதிமொழியை தெளிவாக அளிக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ள சீற்றத்தின் காரணமாக ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கா் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 30,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகே 1989-இல் அமைக்கப்பட்ட

மறைந்த தலைவா் நாராயணசாமியின் சிலையை சாலை விரிவாக்கத்துக்காக மாநகராட்சி நிா்வாகம் அகற்றும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.

இல்லாவிட்டால் நல்லதொரு மாற்று இடத்தைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா் சின்னசாமி.

இக்கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் சுந்தரம், பொருளாளா் பாண்டியன், நிா்வாகி த. மணிமொழியன், ஒருங்கிணைப்பாளா் ப. ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT