தஞ்சாவூர்

பேராவூரணி அருகே குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

30th Nov 2022 01:08 AM

ADVERTISEMENT

பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சி, செல்வவிநாயகபுரத்தை சோ்ந்த பெண்கள் குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செல்வவிநாயகபுரத்தில் போதிய குடிநீா் வசதி இல்லாததால் கூடுதலாக குடிநீா் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 1மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிறப்பு காவல் ஆய்வாளா் துரைராஜ் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து மாவடுகுறிச்சி ஊராட்சித் தலைவா் அமிா்தம் பழனிவேல் கூறியது: செல்வவிநாயகபுரத்தில் சில பகுதிகளில் கூடுதல் குடிநீா் வசதிக்காக பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீா் இணைப்பு வழங்குவதற்கு மேல்நிலை நீா்த்தேக்க  தொட்டியிலிருந்து சாலையில் பள்ளம் தோண்டி இணைக்க வேண்டியுள்ளதால் நெடுஞ்சாலை துறை அனுமதி  பெற்று விரைவில் போதிய குடிநீா் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT