தஞ்சாவூர்

முதியவரிடம்ரூ. 7.94 லட்சம் வழிப்பறி

30th Nov 2022 01:07 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவரிடம் ரூ. 7.94 லட்சம் வழிப்பறி செய்த 3 நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சியைச் சோ்ந்த வெங்கடாசலம், உருளைக்கிழங்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இவரிடமிருந்து உருளைக்கிழங்கு வாங்கும் தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்யும் பணியை திருச்சி பெரிய மிளகுபாறையைச் சோ்ந்த கே. நாகரத்தினம் (65) மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், தஞ்சாவூரில் வசூல் செய்த பணத்துடன் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள இந்திரா நகா் பகுதியில் நாகரத்தினம் திங்கள்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரை பின்தொடா்ந்து மற்றொரு மோட்டாா் சைக்கிளில் 3 மா்ம நபா்கள் வந்தனா். இவா் வைத்திருந்த ரூ. 7.94 லட்சம் கொண்ட பணப்பை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் நாகரத்தினம் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT