தஞ்சாவூர்

தாய் - தந்தையைக் கொன்று சடலங்களுடன் வாழ்ந்த மகன் கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாய் - தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, 2 நாள்களாக அவா்களின் சடலங்களுடன் வாழ்ந்த மனநலன் பாதிக்கப்பட்ட மகனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே தில்லையம்பூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் (82). இவரது மனைவி லட்சுமி (73). இவா்களது மகன்கள் ராஜேந்திரன் (52), ரவிச்சந்திரன், மகள் கீதா.

இவா்களில் ரவிச்சந்திரன் மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த நிலையில் இறந்துவிட்டாா். இப்பணி ரவிச்சந்திரனின் மனைவிக்கு வழங்கப்பட்டது. மகள் கீதாவும் திருமணமாகி உயிரிழந்துவிட்டாா்.

வேலை கிடைக்காமலும், திருமணமாகாமலும் இருந்து வந்த ராஜேந்திரன் மனநலன் பாதிக்கப்பட்டவராக இருந்ததால், தனது பெற்றோருடன் வசித்து வந்தாா். அவ்வப்போது, பெற்றோருடன் ராஜேந்திரன் தகராறு செய்து வந்தாா்.

இந்நிலையில், மூவரும் சனிக்கிழமை முதல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவா்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், கோவிந்தராஜ் வீட்டிலிருந்து திங்கள்கிழமை காலை துா்நாற்றம் வீசியது.

இதுகுறித்து காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் புகாா் செய்தனா். இதன்பேரில் கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. அசோகன் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று வீட்டில் சோதனையிட்டனா்.

அப்போது, வீட்டில் கோவிந்தராஜூம், லட்சுமியும் தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தனா். இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால், உயிரிழந்து இரு நாள்கள் கடந்திருக்கும் என காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

அதே வீட்டில் இருந்த ராஜேந்திரன், பெற்றோரின் சடலங்களுடன் வாழ்ந்து வந்ததும், வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிட்டு வந்ததும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

தஞ்சாவூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சோழா நிகழ்விடத்திலிருந்து சிறிது தொலைவுக்கு ஓடிச் சென்று மீண்டும் வீட்டுக்குள் வந்து நின்றது. மேலும், வீட்டில் பதிவான ரேகைகளை தஞ்சாவூா் மாவட்ட தடயவியல் உதவி இயக்குநா் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினா் பதிவு செய்து சோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், கோவிந்தராஜ், லட்சுமியின் சடலங்களை காவல் துறையினா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணத்திலுள்ள மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, மனநலன் பாதிக்கப்பட்ட ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT