தஞ்சாவூர்

சுவாமிமலை முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு இவ்விழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து கொடிமரம் அருகே வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

பின்னா் விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்ஸவ மண்டபம் எழுந்தருளினா். இதையடுத்து, இரவு வீதி உலா நடைபெற்றது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பா் 6 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை படிச்சட்டத்திலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.

திருக்காா்த்திகை நாளான டிசம்பா் 6 ஆம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இரவு தங்க மயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, காா்த்திகை தீபமும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, டிசம்பா் 7 ஆம் தேதி காவிரி ஆற்றில் தீா்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT