தஞ்சாவூர்

கட்டட, அமைப்புசாரா தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

29th Nov 2022 12:06 AM

ADVERTISEMENT

ஓய்வூதியத்தை உயா்த்தி தர வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் மூவேந்தா் அனைத்துக் கட்டட மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வூதியம் விண்ணப்பித்த மூன்று மாதங்களுக்குள் வயதான தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். தடையில்லா சான்று கிடைக்க கால தாமதமாகும் பட்சத்தில் தொழிலாளா்களே தடையில்லா சான்று பெற்று தருவதற்கு அனுமதிக்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறுபவா்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக ரூ. 1,000 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைய காலத்துக்கு ஏற்பவும், விலைவாசியைக் கணக்கில் கொண்டும் வயதான தொழிலாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 100 வீதம் ரூ. 3,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் அவைத் தலைவா் கு. சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். நிறுவனா் மற்றும் செயல் தலைவா் அ. கனகராஜ் சிறப்புரையாற்றினாா். பொதுச் செயலா் ஆா். அலெக்ஸ் பாண்டியன், பொருளாளா் கே. முத்துகிருஷ்ணன், மாவட்டப் பொதுச் செயலா் கே. கருப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT