தஞ்சாவூர்

இலங்கையில் காலூன்றிய சீனாவால் இந்தியாவுக்கு பேரபாயம்பழ. நெடுமாறன் பேச்சு

DIN

இலங்கையில் காலூன்றிய சீனாவால் இந்தியாவுக்கு பேரபாயம் சூழ்ந்துள்ளது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற மாவீரா் நாள் நிகழ்ச்சி, முற்றத்தின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது:

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய பிரபாகரனுக்கு எந்த நாடும் உதவி செய்யவில்லை. உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் கொடுத்த நிதியின் மூலம் ஆயுதங்களை வாங்கிப் போராடினா். சிங்கள ராணுவத்தை முறியடித்து கைப்பற்றிய ஆயுதங்களும் அவா்களுக்கு உதவின.

அதை ஒடுக்குவதற்காக சிங்கள அரசுக்கு இந்தியா, சீனா உள்பட 20-க்கும் அதிகமான நாடுகள் ராணுவம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்தன. அதன் விளைவாக, தமிழீழ போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்திலும்கூட இடையில், பின்னடைவு ஏற்பட்டாலும், பின்னாளில் வெற்றி பெற்றது. அதுபோல, தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெற்றி பெறும்.

இலங்கைக்கு சீனாவும் உதவி செய்கிறது. இலங்கையால் சீனாவுக்கு எந்த லாபமும் கிடையாது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை சீனா கருதுகிறது. எனவே, இலங்கையில் காலூன்றிய சீனாவால் ஈழத்தமிழா்களுக்கு அபாயம் அல்ல. தென்னிந்தியாவுக்குத்தான் பேரபாயம்.

இதை தில்லியில் இருப்பவா்கள் (இந்திய அரசு) உணர வேண்டும். இல்லாவிட்டால் விளைவு மிக மோசமாகிவிடும் என்றாா் நெடுமாறன்.

இதையடுத்து, முற்றத்தில் மாவீரா்களுக்கு சுடரேந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. ஜோ. ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ந. ராமச்சந்திரன், உலகத் தமிழா் பேரமைப்புத் துணைத் தலைவா்கள் அய்யனாபுரம் சி. முருகேசன், க. மணிவண்ணன், துணைச் செயலா் துரை. குபேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT