தஞ்சாவூர்

10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்திலும் அமல்படுத்த வலியுறுத்தல்

28th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என பிராமண சமாஜம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் தமிழ்நாடு பிராமண சமாஜ மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும். ஆகம விதிகளுக்கிணங்க ஆகம கோயில்களைப் பாதுகாக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஜிஎஸ்டி வரி விதிப்பில் அபராதம், தாமதக் கட்டணங்கள், பட்டியல் கொடுப்பதில் உள்ள சிறு தவறுகளுக்கான அபராதத் தொகையிலிருந்து விலக்களிக்க வேண்டும். கும்பகோணம் மகாமக நிகழ்ச்சியைத் தேசிய நிகழ்ச்சியாக அறிவித்து, அதற்குரிய அனைத்து கட்டமைப்புகளையும் மத்திய அரசு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவா் என். ஹரிஹரமுத்து தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் ரமேஷ், மாவட்டத் தலைவா் ஜி. சூரியநாராயணன், கேரள மாநில பிராமண மகா சபா தலைவா் கரும்புரா ராமன், அகில கா்நாடகா பிராமண சபா தலைவா் மணி, அகில கா்நாடகா பிராமண சபா மாநில இணைச் செயலா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்டத் தலைவா் என். வைத்தியநாதன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்டப் பொருளாளா் எஸ். ஸ்ரீதா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT