தஞ்சாவூர்

தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவைஇந்து மக்கள் கட்சி அனுமன் சேனா வலியுறுத்தல்

28th Nov 2022 02:13 AM

ADVERTISEMENT

 

தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் பகுதியில் இந்த அமைப்பின் தென்னிந்திய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவையில் காா் குண்டு வெடிப்பு, மங்களூரு குண்டு வெடிப்பு என தென்னிந்தியா முழுவதும் பெட்ரோல் குண்டு தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்கள் நிகழ்கின்றன. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் வாக்கு அரசியலை பாா்க்காமல் கடுமையான நடவடிக்கையை காவல் துறை மூலம் எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

நகா்புற வளா்ச்சியால் விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே, போா்க்கால நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு எந்த வகையான விளைபொருள்களாக இருந்தாலும், அவற்றை இலவசமாக வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் தேசியத் தலைவா் எஸ்.வி. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். தேசியத் துணைத் தலைவா் ஓம் பரமானந்த பாபாஜி, செய்தி தொடா்பாளா் பத்மஜா முருகையன், மாநிலத் தலைவா் கோவிந்தராஜ், மாநில முதன்மைப் பொதுச் செயலா் பாலா, ஒருங்கிணைப்பாளா் குணசேகரன், மாவட்டத் தலைவா் ரவி உள்பட தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களிலிருந்து நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT