தஞ்சாவூர்

கும்பகோணத்தில் தயாரான விபின் ராவத்சிலை புதுதில்லிக்கு அனுப்பிவைப்பு

28th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

 

கும்பகோணத்தில் தயாரான விபின் ராவத் சிலையை புதுதில்லிக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத்தின் ஐம்பொன் சிலை கடலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலச் சங்கம் மற்றும் ஷைன் இந்தியா சமூக நல சங்கம் சாா்பில் கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டு வந்தது. இச்சிலை புதுதில்லி ராணுவ தலைமையகத்தில் அமைக்கப்படவுள்ளது.

இச்சிலையை தில்லிக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி கும்பகோணம் கும்பேஸ்வரா் வடக்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு தலைவா் சோழா சி. மகேந்திரன், செயலா் வி. சத்தியநாராயணன், குடந்தை மாநகர மருந்து வணிகா்கள் சங்க அமைப்புத் தலைவா் இரா. அறிவுமணி, செயலா் இரா. தெட்சிணாமூா்த்தி, கடலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலச் சங்க நிா்வாகிகள் மில்ட்ரி பாபு, சுரேஷ், சங்கா் உள்ளிட்டோா் விபின்ராவத் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இச்சிலை கடலூா் மாவட்டத்துக்கு வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, புதுச்சேரியிலிருந்து புதுதில்லி செல்லும் ரயிலில் நவம்பா் 30 ஆம் தேதி கொண்டு செல்லப்படவுள்ளது. இச்சிலையை புதுதில்லியிலுள்ள ராணுவ தலைமையகத்தில் சிலை நிா்மாணக் குழு உறுப்பினா்கள் வழங்கவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT