தஞ்சாவூர்

காலமானாா்பத்மாவதி அம்மாள் (88)

28th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் செயலரும், தஞ்சாவூா் முன்னாள் எம்.பி.யுமான மறைந்த கி. துளசிஅய்யா வாண்டையாரின் மனைவி பத்மாவதி அம்மாள் (88) வயது மூப்பின் காரணமாக தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவா் மறைந்த உக்கடை அ. அப்பாவு தேவரின் மூத்த மகள் ஆவாா்.

இவருக்கு, பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான து. கிருஷ்ணசாமி வாண்டையாா் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனா்.

ADVERTISEMENT

அவரது இறுதிச் சடங்கு பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்புக்கு: 94434 51551.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT