தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில்காற்றுடன் கனமழை

28th Nov 2022 02:12 AM

ADVERTISEMENT

 

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள நடுவிக்கோட்டை, பாதிரங்கோட்டை, அலிவலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் சுமாா் 2 மணி நேரத்துக்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் சேதமடையும் வாய்ப்புள்ளதாக கூறி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

அதேநேரத்தில், காா்த்திகை மற்றும் மாா்கழி பட்ட கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள், இன்னும் ஒரு வார காலத்துக்கு மழை ஏதும் பெய்யாமல் இருந்தால் இந்த மழை கடலை சாகுபடிக்காக நிலத்தை உழவு செய்வதற்கு போதுமான ஈரப்பதமாக இருக்கும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT