தஞ்சாவூர்

மூத்த குடிமக்கள் நலச் சங்கம் தொடக்கம்

27th Nov 2022 02:34 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட மூத்த குடிமக்கள் நலச் சங்கத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வா.செ. செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவை பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரித் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தொடங்கி வைத்தாா்.

நற்பணியாற்றி வரும் தஞ்சாவூா் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலா் எஸ். அருள்தாஸ், மனவளக்கலை ஏ. ஆரோக்கியசாமி, வெற்றித் தமிழா் பேரவை மாநிலத் துணைப் பொதுச் செயலா் இரா. செழியன், பட்டிமன்றப் பேச்சாளா் ச. இந்துமணி ஆகியோருக்கு மேயா் சண். ராமநாதன் விருதுகள் வழங்கினாா்.

ADVERTISEMENT

மேலும், மூத்த குடிமக்களுக்கு தனி சிகிச்சை அரங்கத்தை உருவாக்கியுள்ள நேஷனல் பாா்மா மருத்துவமனைக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் சிறப்புரையாற்றினாா். சங்கப் பொதுச் செயலா் அய்யாறு புகழேந்தி, பொருளாளா் வி. கண்டிமுத்து, ஒருங்கிணைப்பாளா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சங்கத் துணைச் செயலா் துரை. கோவிந்தராஜ் வரவேற்றாா். துணைத் தலைவா் ஏ. சிவஞானம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT