தஞ்சாவூா் மாநகரில் நவம்பா் 29 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூா் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்துக்கு வரும் குடிநீா் விநியோகம் செய்யும் முதன்மை குடிநீா் குழாய் பழுதடைந்துள்ளது. இதனால், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணி நவம்பா் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, 1 ஆவது வாா்டு முதல் 51 ஆவது வாா்டு வரையிலான அனைத்து வாா்டுகளிலும் நவம்பா் 29, 30, டிசம்பா் 1 ஆம் தேதிகளில் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், சிக்கனமாகப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.