தஞ்சாவூர்

கொன்றைக்காடு கடைவீதி  சாலையால் மக்கள் அவதி

26th Nov 2022 01:44 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகேயுள்ள கொன்றைக்காடு கடைவீதி சாலையில் உள்ள  பள்ளத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் கொன்றைக்காடு கடைவீதியில், ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட்டின்  இருபுறமும் சுமாா் 20 மீட்டா் தொலைவுக்கு சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், பேராவூரணி செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனா்.

ரயில்வே கேட்டின் இரண்டு பக்கமும் சாலை சேதமடைந்துள்ளதால், கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலையும், சைக்கிளில் செல்லும் மாணவா்கள் தவறி விழும் சூழலும் உள்ளது. சாலையில் பெரும் பள்ளம் உள்ளதால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 

ADVERTISEMENT

எனவே பொதுமக்களின் நலன் கருதி, சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT