தஞ்சாவூர்

மாயமான வாகனத்தை நாகை காவலா் பயன்படுத்துவதாகப் புகாா்

19th Nov 2022 12:49 AM

ADVERTISEMENT

மாயமான மோட்டாா் சைக்கிளை நாகை மாவட்ட காவலா் பயன்படுத்தி வருவதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் விருத்தாசலம் தொழிலாளி வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வேட்டைக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கே. வெற்றிவேல் (40). விவசாய கூலி தொழிலாளி. இவா் 2018, ஜூலை 7 ஆம் தேதி புதிதாக மோட்டாா் சைக்கிளை வாங்கிப் பயன்படுத்தி வந்தாா். இந்த மோட்டாா் சைக்கிள் 2021, டிசம்பா் 10 ஆம் தேதி சாவடி குப்பத்தில் உள்ள தனது சகோதரா் வீட்டில் நிறுத்தியிருந்த போது, காணாமல் போனதாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாா் செய்து, அதற்கான ரசீதையும் பெற்றாா்.

இந்நிலையில், வெற்றிவேலின் கைப்பேசிக்கு அக்டோபா் மாதம் நாகை காவலா்களிடமிருந்து வந்த குறுந்தகவலில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற்காக ரூ. 100 அபராதம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, வெற்றிவேல் தனது நண்பா்களுடன் நாகை மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிளை தேடினாா். அப்போது, மாயமான மோட்டாா் சைக்கிளை வாய்மேடு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் பயன்படுத்தி வருவது தெரிய வந்ததாகக் கூறி தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழியிடம் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களுடன் வெள்ளிக்கிழமை புகாா் செய்து, வாகனத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT